மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

0
94

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவை முக்கிய சமூக வலைதளங்கள் ஆக விளங்குகிறது. இந்த சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் போலியான தகவல்களை பரப்புவது வேலையாகிவிட்டது. சில சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. ஆனாலும் இதில் பல நன்மையான அம்சங்கள் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை உண்டாக்கி இந்த விதிமுறைகள் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு செவிசாய்ப்பது தொடர்பாக இந்த சமூக ஊடகங்கள் இன்னும் எந்த விதமான பதிலும் தெரிவிக்காத சூழலில், இதுபோன்ற சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கவும், வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைய விட இதன் காரணமாக,இன்று பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பதில் தெரிவிக்குமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.