சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

0
115
K. Pandiarajan
K. Pandiarajan

சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும். திமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ளவர்கள் அப்போது கழற்றிவிடப்படுவார்கள் என்று திமுக கூட்டணி குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,அதிமுக எம்பியுமான சிவி சண்முகம் பேசியிருந்தார்.

சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவி சண்முகம் பாஜக மற்றும் திமுக கூட்டணி,அதன் மறைமுக உறவு குறித்து பேசியிருந்தார்.

அப்போது பேசிய அவர் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப்போகிறது. அதனால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப் போகிறது.  திமுகவிடம் எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை கழட்டி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது என்று பேசியிருந்தார். ஏற்கனவே திமுக மற்றும் பாஜக இடையே மறைமுகமான நட்பு இருப்பதாக பேசி வந்த நிலையில் இவரும் அதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

a

அதனைத்தொடர்ந்து சிவி சண்முகத்தின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த கட்சி எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்பது பற்றி அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு தன்மை இருக்கிறது. யாரோ ஒரு மூணாம் கட்ட தலைவர்கள் கூட்டணி வைக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றுவிமர்சித்து பதில் அளித்திருந்தார்.

மேலும் பாஜக கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் பாஜகவில் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லது திமுகவில் சேர்ந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன்.  பாஜக இங்கே கட்சி நடத்துவது தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  அதற்காகத்தான் நாங்கள் எங்கள் கட்சியை நடத்துகிறோம் . ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை போல நாமும் அப்படியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம் கிடையாது என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை  சொன்னதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  நெய்வேலி என்எல்சியில் இடம் கையகப்படுத்துவதில் மத்திய அரசாங்கம் தவறை செய்கிறது.  ஆனால் இந்த நில எடுப்பு என்பது மாநில அரசு மூலம் நடைபெறுகிறது. இதை வைத்துதான் பாஜகவும் திமுகவும் கூட்டணியாக செயல்படுகிறார்கள்  என்ற சந்தேகத்தில் சிவி சண்முகம் அந்த கேள்வியை எழுப்பினார்.

அதற்காக சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.   எந்த உறவுகள் எந்த நேரத்தில் ஏற்படுத்த வேண்டுமோ அதை எடப்பாடி பழனிச்சாமி சரியான நேரத்தில் ஏற்படுத்துவார்.   நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் தனித்து கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி வரும்.  அதே நேரம் பாஜகவை இன்னும் தோழமைக் கட்சியாக தான் பார்க்கிறோம் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.