அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

0
80

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தற்சமயம் அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் மறுத்து இருக்கின்றார். அது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் முருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய சமயத்தில் அவர்கள் கேட்டதற்கு இது அவர்களுடைய விருப்பம் இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் நேரடியாகவே பேசியிருக்கின்றார். ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்காத காரணத்தால் மனவருத்தத்துடன் டெல்லிக்கு திரும்பியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

பாஜகவின் இந்த விடாமுயற்சிக்கு காரணம் சசிகலா பக்கமும் ஒரு சில அதிமுகவின் உண்மை விசுவாசிகள் இருப்பதுதான் என்று சொல்கிறார்கள். அவர்களோடு ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயமாக திமுகவை அறவே ஒழித்து விட இயலும் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

ஆனால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் கூட அதிமுகவில் சசிகலா அவர்களுக்கு இடம் அளிப்பது சாத்தியமற்றது என்று உறுதியாக இருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஒருபுறம் அதிமுகவை கைப்பற்றுவதற்காக டிடிவி தினகரன் பல ரகசியத் திட்டங்களை தீட்டி வருகின்றார். மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய திட்டங்கள் ஒவ்வொன்றையும் சாமர்த்தியமாக தெரிந்து கொண்டு அனைத்தையும் தவிடுபொடியாக்கி வருகின்றார். இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் எத்தனை காலத்திற்கு என்னென்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அனைத்தையுமே நின்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டு வருகின்றார் என்று சொல்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் அவருடைய விசுவாசிகள்.

அதோடு சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்தே சசிகலாவை அதிமுகவின் பக்கம் கூட அந்த விடாமல் துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு சசிகலா ஒரு வேலை முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் அராஜகம் தலைதூக்கும் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.

ஏனென்றால் சசிகலா என்றாலே மன்னார்குடி மாபியா என்று பெயர் எடுத்தவர் என்பது தமிழகத்தில் அனைவராலும் அறியப்பட்டது தான் என்று சொல்கிறார்கள். அப்படி பெயரெடுத்த ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைத்தாள் தமிழகத்தில் குண்டர்களின் தொந்தரவு அதிகமாகிவிடும் என்றும் அஞ்சுகிறார்களாம். ஆனால் டிடிவி தினகரன் சசிகலாவும் எப்படியாவது அதிமுகவை தங்கள் வசப்படுத்தி முதல்வர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அவர்களுடைய செயல்பாடு எவ்வளவு வேகமாக இருந்தாலும் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறார்கள்.

அதோடு அவரை முதல்வர் பதவியில் அமர வைத்த சமயத்தில் சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி இவ்வளவு வேகமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ந்து வரும் செல்வாக்கையும், அவருடைய செயல்பாட்டின் மேகத்தையும் கண்டு திமுகவுடன் சேர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.