வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

0
88
#image_title

வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!

தற்போதுள்ள வக்பு வாரிய தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

வருமானம் வரக்கூடிய பள்ளிவாசல்களில் தங்களது கட்சியை சார்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்து வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்து வருகிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் வம்பு வாரியத்திற்கு தலைவராக வருபவர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வம்பு வாரியத்தின் தலைவராக முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் இருந்து வருகிறார். இவர் வம்பு வாரிய தலைவராக பதவியேற்றுவது முதல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பல்வேறு பள்ளிவாசல்களில் நிரந்தர தலைவராக இருப்பவர்களை கூட நீதிமன்ற உத்தரவை மீறி தற்போதுள்ள வக்பு வாரிய தலைவர் அவர்களை நீக்கம் செய்துவிட்டு தனது கட்சியை சேர்ந்தவர்கள், தனக்கு ஆதரவாளர்களை அந்த பொறுப்பில் நியமித்து வருகிறார்.

சென்னை புளியந்தோப்பு கடலூர் திருச்சி இடங்களில் இருக்கிற வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை பிளாட்டுக்களாக மாற்றி விற்பனை செய்ய முயற்சிப்பதுடன், அந்த சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் வம்பு வாரிய தலைவர் மீது தல ரஹீம் குற்றம் சாட்டினார்.

தற்போதுள்ள வக்பு வாரிய தலைவரின் முறைகேடுகளை ஆதாரத்துடன் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும். முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வக்பு வாரிய தலைவர் மற்றும் அவருக்கு துணை புரியும் உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வக்புகளையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டுக் கொண்டார்.

இது குறித்து தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தடா ரஹீம் கூறினர்.

author avatar
Savitha