நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

0
65

தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அதாவது இன்று முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கண்காணிப்பதற்கு ஏடிஜிபிகள் மற்றும் அதிக அளவிலான உயர் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.சென்னை மண்டலம் சென்னை சென்னை நகரம் ஹச்.எம்.ஜெயராம் ஐஜி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் சாரங்கன் ஐஜி காவல் பயிற்சி சென்னை, வேலூர் மண்டலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் மணிஜி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல விழுப்புரம் மண்டலம் விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விழுப்புரம் சரக டிஐஜி எம் பாண்டியன் அவர்களையும் சேலம் மண்டலத்தில் சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஐஜி தினகரன் உள்ளிட்டோரும் கோவை மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சஞ்சய் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் லோகநாதன் மற்றும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் ,ராமநாதபுரம், தேனி ,சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் சைலேஷ்குமார் யாதவ் ஏடிஜிபி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கு முருகன் ஐ ஜி நவீனமயமாக்கல் பிரிவு ஆகிய 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த நோய் தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்படுகிறார்கள் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.