வாழ்வா சாவா இறுதி வாய்ப்பை உறுதி செய்ய! நேருக்கு நேர் சந்திக்கும் அணிகள்!

0
132

ஐபிஎல் திருவிழாவில் இன்று சந்திக்கவிருக்கும் அணிகள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆகும்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிள் இரண்டாம் இடத்தில் பெங்களூரு அணியின் மூன்றாமிடத்தில் டெல்லி அணியில் இருந்தாலும் கூட இரண்டு அணிகளுமே பதினான்கு புள்ளிகளோடு தான் இருந்து வருகின்றன.

நேற்றைய தினம் நடந்த போட்டியின் மூலமாக கொல்கத்தா அணியும் 14 புள்ளிகளுடன் இந்த இரு அணிகள் உடனும் மல்லுக்கட்டும் நிலையில் இருக்கின்றது. ஆகவே இன்றைய தின போட்டியில் வெற்றியே பிளே ஆப் சுற்றை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கின்றது.

இவ்விரு அணிகளுக்கான முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய டெல்லி அணி 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவனைத் தொடர்ந்து விளையாட வந்த பெங்களூரு அணியால் 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அதோடு 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து விட்டது.
இன்றைய தின போட்டியில் பெங்களூரு இதற்கு முன் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

இரு அணிகளும் கடந்த சில போட்டியில் தோல்வியை சந்தித்து வரும் காரணத்தால், இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.