ரசிகர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்!! சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!!

0
178
#image_title

ரசிகர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் ஐபிஎல் போட்டிகள்!! சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ம் தேதி தொடங்கவுள்ளது, இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல், போட்டி நடைபெறும் மைதானத்திலும் மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் ஏழு லீக் போட்டிகள் நடைபெற உள்ள, அவற்றிக்கான டிக்கெட்கள் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, மேலும் கடுமையான கடும் கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்க உள்ளது தமிழ்நாடு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் நிர்வாகம் ஆகியவை தெரிவித்துள்ளன.

ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் உணவு, தண்ணீர் பாட்டில், லேப்டாப், மழைக்கால குடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பீடி, சிகரெட், குட்கா, செல்லப்பிராணிகள், ஹெல்மெட், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், போன்றவைகளுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது என்றும், போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகத்தான் ரசிகர்கள் அவர்கள் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

போட்டிகளை காண வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், சென்னையில் முதல் போட்டி வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி தொடங்க உள்ளதாகவும், டிக்கெட் விலையாக 1,500 மற்றும் 3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.