Connect with us

Breaking News

IPL 2023: குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர் விலகல்! இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடுமா?

Published

on

IPL 2023: Gujarat Titans Key Player Quits! Will a second time win?

IPL 2023: குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர் விலகல்! இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடுமா?

கடந்த முறை பிரீமியர் லீக் ஐபிஎல் பதினைந்தாவது சீசனில் குஜராத் ஐட்டம் அணி முதல் முறையாக அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த அணியை ஏலத்தில் நடக்கும் பொழுது பெரும்பாலான பேருக்கு நம்பிக்கை இன்றி தான் இருந்தனர். மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது நம்பிக்கை இன்று இருந்ததை எடுத்து இவர்கள் வெற்றி அடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு அவர்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் தவிடுபொடியானது

Advertisement

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பிறகு ஐபிஎல் கோப்பையை முதல் சீசனிலேயே வென்ற அணி என்ற பெயர் குஜராத் டைட்டன்ஸ் வென்றது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றியடைந்ததை அடுத்து தற்பொழுது நடைபெறப்போகும் டி20 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 14 லீக் நிலை ஆட்டங்களில் குஜராத் அணியானது 10 ஆட்டங்களில் வெற்றி அடைந்தது.

அந்த வகையில் புள்ளியல் மதிப்பீட்டில் முதலிடத்தையும் வகித்தது.இம்முறையும் ஆட்டத்தை வெல்ல அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் அணியில் இருந்து ஆறு வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ்,குர்கீரத் சிங், ஜேசன் ராய் மற்றும் வருண் ஆகியோரை வெளியேற்றியுள்ளனர்.

Advertisement

இதில் உள்ள ரஹ்மானுல்லா குரூபாஸ் மற்றும் பெர்குசன் இவர்கள் இருவர் மட்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி அடைந்ததில் முக்கிய பங்கு பெர்குசனுக்கு உள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குஜராத் டைட்டன்ஸ் அணி சற்று பலவீனம் அடைந்ததாக உள்ளது. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் பர்ஸ் அளவு 19.25 கோடியாக உள்ளது.

Advertisement