ஐபிஎல் கிரிக்கெட் தொடர்! பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

0
103

ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றமடைந்திருக்கிறது.

முதலாவது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விழுத்தி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

2 அதன்படி நேற்றிரவு நடைபெற்ற 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பெங்களூர் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. டூப்ளஸிஸ், விராட் கோலி, உள்ளிட்ட வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமறங்கினார்கள்.

கடந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த விராட்கோலி இந்த முறை ஒரு சிக்சர் அடித்து 7 ரன்கள் எடுத்து ஆட்டம்தான் இதனைத்தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்த ரஜத் படித்தார் டூப்ளஸஸுடன் இணைந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது 9 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. பெங்களூரு அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தபோது அணியின் ஒட்டு மொத்த ரன்கள் 79தாக இருந்தது.

டூப்ளஸிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அடுத்த வீரர் 13 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மிகவும் சிறப்பாக விளையாடிய ரஜப் படிதார் அரை சதமடித்தார் 58 ரன்கள் எடுத்திருந்தபோது இவர் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அப்போது அணியின் ரன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஆக இருந்தது.இதன் பிறகு வந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகவே அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது, ஜோஸ்பட்லர், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட ஜோடி தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலமாக வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஜெய்ஸ்வால் 21 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், ஆட்டமிழந்தனர்.

ஆனாலும் ஜோஸ் பட்லர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் 18.1 ஓவரில் அந்த அணி தன்னுடைய இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜோஸ் பட்லர் 60 பந்துகளை சந்தித்து 106 ரன்கள் சேர்த்தார், அதோடு இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவிருகின்ற நிலையில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. இரண்டிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.