நாள்தோறும் 44 ரூபாய் முதலீடு செய்தால் 27 லட்சம் உங்கள் பாக்கெட்டில்! எல்ஐசியின் அதிரடி திட்டம்!

0
111

எதிர்காலத்திற்கு தேவைப்படும் நிதி பாதுகாப்பை இளமை காலத்திலேயே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக சேமிக்கும் பணம் மிகப்பெரிய செல்வத்திற்காக முதலீடாக மாற வேண்டும். அந்த வீட்டில் எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்கள் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதிலும் எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் ஆகிய இரண்டையும் வழங்குகிறது.

அதிக லாபம் கிடைப்பதுடன் தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு உத்திரவாதம் இருக்கிறது. என்பதால் எதிர்கால சேமிப்பிற்கு திட்டமிடும் தங்களுக்கான சிறப்பான பாலிசியாக இந்த திட்டம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மற்ற பாலிசிகளில் இருந்து வேறுபட்டதாக இந்த பாலிசி இருக்கிறது இங்கே காப்பீடு செய்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தொடர்ச்சியாக பணத்தை சேமிக்கவும் பாலிசியின் முதிர்வு காலத்தில் மிகப்பெரிய தொகை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தங்களுக்கு எண்டோவ்மெண்ட் திட்ட பலன்களும் கிடைக்கின்றது.

இந்த ஜீவன் உமாங் பாலிசியில் இணைந்து எதிர்காலத்தில் நீங்கள் 27 லட்சம் பெற வேண்டும் என்றால் தற்போதைய நாளிலிருந்து எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற கணக்குகளை தற்போது பார்க்கலாம்.

ஜீவன் உமாங் பாலிசியில் 30 வருட கால திட்டங்களை தங்களுடைய பச்சிளம் குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்து மாதம் தோறும் 1,032 ரூபாய் செலுத்தி வருகிறீர்கள் என்றால், 30 வருடங்களில் நீங்கள் 4.58 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதாவது நாள்தோறும் நீங்கள் 44 ரூபாய் என்ற வகையில் முதலில் செய்தால் போதுமானது. இன்றைய விலைவாசியில் இது 4 அல்லது 3 தேனீருக்கு சமமான தொகை மட்டுமே.

பாலிசி முதிர்வு அடைந்த பின்னர் தங்களுடைய குழந்தைக்கு வருடம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் போனஸ் தொகை கிடைக்கும் குழந்தையின் 100 வருடங்கள் வரையிலும் இந்த தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆக மொத்தம் கிடைக்கும் தொகையை கணக்கு போட்டு பார்த்தால் 27.60 லட்சமாக இருக்கும்.

ஒருவேளை தங்களுடைய குழந்தைக்கு 30 வயது ஆகும்போது அதன் எதிர்கால கல்வி அல்லது வேறு ஏதாவது செலவுகளுக்கு பணம் தேவைப்படும். அப்படி என்றால் அந்த சமயத்திலேயே முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் 30 வருடங்களுக்கு உண்டான போனஸ் தொகை மற்றும் அடிப்படை உத்திரவாத தொகை மட்டுமே கிடைக்கும்.