Connect with us

Breaking News

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! 

Published

on

introducing-new-facilities-for-devotees-at-sabarimala-information-released-by-devasam-board

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

உலகில் அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டுதோறும் சபரிமலையில் மண்டல விளக்கு  பூஜைக்காக நடை திறக்கப்படும்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கிய பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்காக  நடை திறக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதினால் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது.மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு விதமான கேள்வி எழுப்பப்பட்டது.அதனை தொடர்ந்து பெரியவர்கள்,சிறியவர்கள் ,இளைஞர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக வரிசை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி அன்று மண்டல பூஜை நடைபெற இருப்பதினால் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அப்போது அந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.மேலும் பல்வேறு துறைகளில் முன் ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளது.

Advertisement

அந்த வகையில் இங்கு பல்வேறு மொழி பேசும் பக்தர்கள் வருவதினால் ஒவ்வொரு மொழியிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இடைவிடாமல் ஒலி பெருக்கியில் மூலமாக அறிவிப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சரணப்பாதையில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரிய நடைப்பந்தல்  பகுதிகளில் பெண்கள்,குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு போடப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.பக்தர்கள் பாதுகாப்பாக ஓய்வெடுக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Advertisement