சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

0
104

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்து அவர்களிடம் திமுக சார்பாக நேர்காணல் நடந்து வருகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் கடைசி நாளாக இருக்கிறது ஆகவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரே தினத்தில் நேர்காணல் நடைபெற இருக்கின்றது.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு தாக்கல் செய்திருக்கின்றார். அதேபோல அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு தாக்கல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. ஸ்டாலின் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆகிய தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் களம் இறங்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அதே சமயத்தில் இந்த இரண்டு வெற்றிகளிலுமே ஸ்டாலின் பெரிய அளவில் வெற்றி மகிழ்ச்சியடையவில்லை என்று சொல்லப்படுகிறது.ஏனென்றால், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிவித்து முன்னிலைப் படுத்தப்பட்டார் ஆனால் அந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் திமுக தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாகவே முதலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஸ்டாலின் பின்பு எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர வைக்கப்பட்டார் ஆகவே இப்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தொகுதி மாறலாம் என்று சொல்லப்பட்டது இருந்தாலும் புதிதாக ஒரு தொகுதியை தேர்வு செய்து அந்த தொகுதியில் களப் பணியாற்றி பின்பு அங்கே வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்டாலின் சுமார் பத்தாண்டு காலமாக சாதாரண உறுப்பினர் முதற்கொண்டு தனக்காக இந்த தொகுதியில் களப்பணியாற்றி இந்த தொகுதியை நமக்கு வெற்றி வாய்ப்பாக அளித்திருக்கிறார்கள் இதனை விட்டுக்கொடுக்க நாம் முன்வர வேண்டாம் என்று நினைத்தவாறே மறுபடியும் அந்த தொகுதியில் போட்டியிட இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது பிஜேபியை சேர்ந்த நடிகை குஷ்பூ அந்த தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் அனுமதியோடு இந்த தொகுதியில் குஷ்பூ எதிர்த்து நிற்கத் தயார் என்று சவால் விடுத்தார்.

ஆனால் சமீபத்தில் ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்ததில் அவர் தெரிவித்ததாவது, தற்சமயம் நடைபெறும் தேர்தலில் உதயநிதி போட்டியிடமாட்டார் அவர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி சில பல விஷயங்களை செய்த பிறகுதான் அவர் முழு நேர அரசியலில் இறங்குவார் என்பது போல தெரிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அந்த வகையில், அதிமுகவில் சார்ந்தவர்கள் திமுகவின் செயல்பாடுகள் அனைத்துமே இப்படித்தான் இருக்கும் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என ஏளனம் செய்கிறார்கள். இருந்தாலும் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக்கொண்ட திமுக தலைமை உதயநிதியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறக்க ஆயத்தமாகி வருகின்றது.