கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?

0
83
Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today
Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?

வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பிரிப்பதற்கு அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தாங்கள் நிற்க இருக்கும் தொகுதிகளைக்  கேட்டு விருப்பமனு அளித்து வந்துள்ளனர்.அந்த வகையில் திமுக கட்சியில் குடும்ப அரசியலை நடத்தி வருவதாக வெளி வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் அதற்கேற்றார் போல் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியை கேட்டு விருப்பமனு அளித்துள்ளார்.

இதனையடுத்து திமுகவில் விருப்பமனு அளித்தவர்களுக்கு வேட்பாளர் நேர்காணல் நடை பெற்று கொண்டிருந்தது.உதயநிதி ஸ்டாலினும் விருப்பமனு அளித்ததால் அவருக்கும் நேர்காணல் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நேர்காணலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,பொதுசெயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

கேள்விகளை கேட்பதற்கு முன் அங்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நாற்காலி போடும்படி துரைமுருகன் கூறினார்.அவர் அதை கூறுகையில் இப்போதே நாற்காலிக்கு ஆசைப்படக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவிட்டார்.அவர் கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க தொடக்கி விட்டனர்.என் மகன் என்று பாராதீர்கள் கட்சியில் அனைவருக்கும் எப்படி கேள்விகள் கேட்கப்படுமோ அவ்வாறு முறைப்படி கேளுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin

முதல் கேள்வியாக அவரது தந்தையே ஆரம்பித்துள்ளார்,கட்சி போராட்டங்களில் நீங்கள் கலந்து கொண்டதை பற்றி கூறும் படி கேட்டார்.அதற்கு உதயநிதி கூறியது,நீட்,சி.ஐ.ஏ. சூரப்பா விவகாரம் உள்ளிட்ட போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டது என பதிலளித்துள்ளார்.நீங்கள் கட்சிக்காக எவ்வளவு செலவு செய்வீங்க என்று துரைமுருகன் கேட்டுள்ளார்.நான் சில படங்கள் நடித்தும் மற்றும் தயாரித்துள்ளேன் அவற்றின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து கட்சிக்கு செலவு செய்வேன் என்று கூறியுள்ளார்.உங்களுக்கு சீட் தராவிட்டால் கட்சி பணியாற்றுவீர்களா என அவரது தந்தை கேட்டுள்ளார்.

என் தாத்தாவும்,அப்பாவும் இங்கிருந்து தான் முதலில் ஆரம்பித்து கட்சியின் உட்சத்தை தொட்டார்கள்.நானும் அதன் வழியே பின்பற்றுகிறேன்.ஆகையால் சீட் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கட்சிப்பணிக்காக முழு மூச்சுடன் செயல்படுவேன் என்று கூறினார்.இந்த பதிலை கேட்டதும் துணை பொதுச்செயலாளர் தம்பி நீ நல்லா தேரிட்டப்பா என்று கலாய்க்கும் விதமாக கமென்ட் அடித்துள்ளார்.

இவர்களின் இந்த கேள்வியானது வேட்பாளருக்கு கேட்கப்படும் கேள்விகள் போல இல்லாமல் வெறும் கிண்டலும், கேளியுமாக அமைந்திருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் இப்படி ஸ்கிரிப்ட் போட்டு குடுத்திருக்கலாம் எனவும் எதிர் கட்சியினர் பேசி வருகின்றனர்.இவர்களின் இந்த செயலை பார்க்கும் போது தொடர்ந்து வாரிசு அரசியலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இதனையடுத்து குஷ்பூவும் சேப்பாக்கத்தில் போட்டியிடுவதால் திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் கடைசி நேரத்தில் களமிறங்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது.ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது மகனை நிற்க வைக்க விருப்பமில்லாமல் கட்சி பிரச்சாரம் செய்ய மட்டும் உதயநிதி அனுப்பப்படுவார் என அவரது தரப்பினர் கூறுகின்றனர்.