ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

0
97
Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!
Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள்.

இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு வரையில் மட்டுமே முடித்துள்ளனர். இதில் பெரும் அதிசயமாக ஒரு பெண்  மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பு முடித்தார். முதன்முதலில் கத்திரி மலை கிராமத்தை விட்டு குடுபத்துடன்  ஈரோட்டிற்கு  உயர்கல்விக்காக  சென்றுள்ளார். பின் தனது கிராமத்தைப் பற்றி  அவர் கூறினார்.

மேலும்  அவர் எனது கிராமத்தில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்ண உணவு மற்றும் விடுதி, நடுநிலைப்பள்ளி  போன்றவை அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் எட்டாம் வகுப்பு வரை முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் அந்த பெண் கூறினார். இந்த மாணவி கூறியதை  கேட்ட ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்கம்.  ஊரக வளர்ச்சி இயக்கம்  மூலம் செயல்படுத்தப்படும் புன்னகை திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமமாக கத்திரிமலை கிராமம்  அமைந்துள்ளது என கூறினார்கள் .

கத்திரி மலை கிராமத்திற்கு நவாப் வங்கியின் நிதி உதவியாக ரூ 10 லட்சம்  பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணியானது கத்திரி மலை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் முதலில் மின்சார வசதி மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு போன்றவற்றை பெறுவதற்காக சூரியசக்தி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

கத்திரிமலை கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் கணினி மற்றும் கேமரா வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு கணினி  வசதி பெறப்பட்டவுடன்  முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்த பின் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் தயக்கமின்றி அனைவரிடமும் இயல்பாக பழகி வருகின்றனர்.

மேலும் ஆன்லைன் மூலமாக கல்வியாளர்களுடன் பேசி வருகின்றனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் இப்போது குழந்தைகள் பள்ளியில் கற்று கொடுக்கும்  பாடல்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு  பாடுகின்றனர். இதுவரை இல்லாத வகையில் பள்ளிக்கூடம் வரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் புன்னகை திட்டத்தின் கீழ் கத்தரிமலை கிராம மக்களின் வாழ்க்கை புன்னகையாக மாறியது எனவும் மகிழ்ச்சியில் திகைத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K