தமிழக அரசு கேம் சேஞ்சராக செயல்பட்டு வருகிறது! சர்வதேச அமைப்பு முதல்வருக்கு பாராட்டு!

0
65

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து பொதுமக்களை கவரும் விதமாகவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பல திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் பொதுமக்களின் நன்மைக்காக பயன்படும் திட்டமாக இருந்து வருகிறது.

அதிலும் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் மெச்சியது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு ஈடுபாட்டுடன் பல திட்டங்களை செய்து வந்தது தமிழக அரசு.

அந்த விதத்தில் நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகள் சந்தித்த சிக்கல்கள் காலநிலை மாற்றம் காரணமாக, குழந்தைகளின் வளர்ச்சியில் உண்டான பாதிப்புகள் தரமற்ற கல்வி, சுகாதாரம் கிடைக்காத சூழ்நிலை போன்ற இடர்பாடுகளுக்கு முடிவு கட்டும் விதத்தில் தமிழக அரசுடன் யூனிசெப் இந்தியா இணைந்து குழந்தைகள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த சமூக கொள்கைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

இதுகுறித்து யுனிசெப் இந்தியாவின் தலைவர் சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கின்ற சாஸ்திரி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் 108 தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டது. அதற்கு பாராட்டுக்கள் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

90% பேருக்கு முதல் தவணையும், 80 சதவீதம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசி 14 முதல் 18 வயது வரையில் உள்ள மாணவர்கள் குழந்தைகளுக்கு 70% பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழக அரசு மற்றும் தமிழக அரசு நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் அரசின் செயல்பாடு மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்தார்.

கல்வியறிவில் தமிழகம் முன்னணியிலிருக்கிறது நோய்தொற்று பரவலால் கற்றல் இழப்பை மாணவர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மறுபடியும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வியிலுள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய அளவில் இடைவெளி வரக்கூடும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திட்டங்களை எடுத்து மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

நோய் தொடருக்குப் பிறகு குழந்தைகளை பள்ளிக்கு மறுபடியும் அழைத்து வர உலக நாடுகள் அவர்களை சந்தித்தது ஆனாலும் நோய்த்தொற்று பாதிப்புக்கு பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தமிழக முதலமைச்சர் திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்துகிறார் தமிழ்நாடு கேம் சேஞ்சராக இருந்து வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.