அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு! மத்திய அரசின் மகத்தான திட்டம்!

0
88

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு! மத்திய அரசின் மகத்தான திட்டம்!

ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை தாங்கள் சம்பாதித்தவற்றை நம்பிக்கையாக சேமிக்கும் இடம் ஒன்று உண்டென்றால்அது அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்களுக்கு வரை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. வங்கிகள் நிரந்தர வைப்பு களுக்கான வட்டியை உயர்த்தியதில் இருந்து அஞ்சல் துறையும் தற்போது வட்டி உயர்வை அதிகரித்துள்ளது.

இதில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மற்றும் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான சேமிப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.

இதனை அடுத்து மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 8% வட்டியும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7% வட்டியும் இனி கிடைக்கும். மேலும் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை உள்ள முதலீட்டு திட்டங்களுக்கு 1.1% வட்டி விகிதங்கள்அதிகரித்துள்ளது.

மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.1% வட்டியும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7% வட்டியும் கிடைக்கும். தொழிலாளர்களுக்கான சேமிப்பு வைப்பு நிதியான பிபிஎஃப் மற்றும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டங்களின் வட்டி உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.