தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!

0
74

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றன நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. வாக்காளர் பட்டியல் சூழுகி திருத்தம் மேற்கொள்ளும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பணிபுரியும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக போக்குவரத்து ஆணையர் சீ சமயமூர்த்தி, பத்திர பதிவுத்துறை ஐ ஜி பி ஜோதி நிர்மலா சாமி, எல்காட் நிர்வாக இயக்குனர் எம் விஜயகுமார், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா, சிட்கோ கூடுதல் ஆணையர் விபி ராஜேஷ், தமிழ்நாடு கடல் வாரிய துணை தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சம்பத், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குனர் எம் கருணாகரன், காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயலர் எஸ் நடராஜன், தாட்கோ நிர்வாக இயக்குனர் சாஜன் சிங் சவான். கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறை இயக்குனர் ஞானசேகரன், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் மூன்று மாவட்டங்கள் என பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை பார்வையிட இருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு ஒரு மாதம் வரை அவகாசம் இருக்கும் காரணத்தால், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர், மற்றும் புகைப்படம், தொலைபேசி எண், முகவரி ஆகிய தகவல்கள் சரியாக இருக்கின்றதா? என்பதை கவனித்து திருத்தம் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.