கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

0
90

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அமெரிக்க மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சார்ந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் இந்த தேர்தல் நடப்பதில் வாக்களிக்கும் மக்கள் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பிரச்சாரத்தில் இருவரும் மக்களிடம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக தபால் ஓட்டு வசதியும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 24 கோடி வாக்காளர்களில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோர் தபால் வாக்கு மூலம் வாக்களித்துள்ளனர்.

ஜோ பிடன் மக்களிடம், “கட்டாயம் ஓட்டுப்போடுங்கள், அது தான் முக்கியம் “என்றும், அதிபர் டிரம்ப் ” அனைவரும் கட்டாயம் வக்களிக்க வேண்டும்” என்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தல் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம் ஜோ பிடன், “யாரும் ஓட்டல் இல்லாமல் இருக்கக்கூடாது” என்று மக்களிடையே கூறியுள்ளார். மேலும் இருவரும் மக்கள் ஓட்டு போட வலியுறுத்தி சமூக வலைதளங்களில் திவர பிரசாரம் செய்து வருகின்றன.

மேலும் விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களும் தங்களது வாக்குகளை இணையம் வழியாக பதிவிட்டுள்ளனர்.இந்த செயலானது அமெரிக்க மக்களிடையே வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறியும் வகையில் விளங்குகளாக தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here