வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

0
65

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும்.

வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வருகையில் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அத்துடன் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் வர வேண்டியது அவசியமானதாகும். பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், மைதான ஊழியர் உள்ளிட்ட எந்தவொரு பணியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறை அனுமதிக்கும் வரை அவர்களை பயிற்சிக்கு பயன்படுத்தக்கூடாது. அதுபோல் உடல் நலப்பிரச்சினை உடைய யாரையும் பயிற்சி முகாமில் பங்கேற்க இடம் கொடுக்கக்கூடாது.

 

author avatar
Parthipan K