தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்… !

0
82

தமிழக அரசு தற்போது விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது .இதன் காரணமாக இலவச மின்சாரம் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மின் மீட்டர் பொருத்துவாக தமிழக அரசு விவசாயிகளிடம் விளக்கம் அளித்தது.

இந்த மின்மீட்டர் பொருத்துவது நேரடியாக இல்லாமல் மத்திய அரசின் குசும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகளிடம் கூறியுள்ளனர்.

குசும் திட்டம் என்பது மத்திய அரசு சோலார் மின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தும் ஒரு புதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான பணிகள் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக விவசாய மோட்டார்கழுவுடன் சோலார் மோட்டார்களை இணைத்து அதற்கேற்ப நெட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விவசாயிகள் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளவும், இதர உபரி மின்சாரத்தை அவர்கள் கிரிட்டுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபரியாக வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு ,மின்வாரியம் விவசாயிகளுக்கு பணம் செலுத்த இயலும்.

இந்தத் திட்டத்தினை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பயன்படுத்தி மீதமுள்ள மின்சாரம் தொகுப்பிற்கு வழங்கப்படும். விவசாயிகள் வழங்கிய மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு தலா ரூபாய்.3.20 அரசு வழங்கும். தமிழகத்தில் மொத்தம் 21.40 லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்புகள் பெற்று உள்ளன. பல லட்சம் பேர் விவசாய இணைப்பு கோரி விண்ணப்பித்த நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான பணிகள் சில நாட்களில் தொடங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

 

author avatar
Parthipan K