ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

0
65
Information released by the Union Government! Low inflation!
Information released by the Union Government! Low inflation!

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயரும் போது , அந்த நாட்டு  நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். கடந்த சில மாதங்களாக பணவீக்கமால் கடுமையான நெருக்கடியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5.59 %ஆகவும் பணவீக்கம் குறைவான நிலையில் இருந்தது. உணவு பொருட்களின் விலை குறைந்தது தான் இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.01 %ஆகவும் இருந்தது. இந்தநிலையில், ஜூலை மாதத்தில் இது 6.71% ஆகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 5.59 %ஆக பணவீக்கம் இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த நிலவரம் அதிகம் உள்ளது. தொடர்ந்து 7 மாதங்களாக சில்லரை பணவீக்கம் 6%க்கு அதிகமாக இருந்து வருகிறது.

author avatar
CineDesk