தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த மத்திய அரசு வெளியிட்ட தகவல் !!

0
90

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக பணிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டுகளில் குறைந்தது 100 நாட்கள் வேலை செய்யப்பட்டதற்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தத் திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 8,88,42,531 வேலைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும்,இதன் அளவு 99.8 சதவீதம் ஆகும் என்று கூறியுள்ளார்.மேலும் இதற்காக 7, 47,01, 130 வேலைகள் உருவாக்கப்பட்ட உள்ளதாகவும், அதன் அளவு 84% என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் மூலம் கிராமங்களில் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்களின் விரிவு படுத்துவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி வருகின்றது. அந்த வகையில் மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ்,தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகிய நேரடி வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றனர்.

மேலும் மகிளா கிசான் சா சக்திதரன் பரியோஜனா திட்டத்தின் கீழ் 2,39,820 பேர் வேளாண் சூழலில் நடைமுறைகள் (AEP) மற்றும் நிலையான கால்நடை பயிற்சிகளில் இடம் பெற்றுள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்த பண்ணை வாழ்வாதார திட்டத்தின் கீழ், இதுவரை 12,522 பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என்று மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K