Connect with us

Breaking News

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த மூன்று நாட்களுக்கும் இங்கு மழை!

Published

on

Information released by Chennai Meteorological Department! Rain here for the next three days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த மூன்று நாட்களுக்கும் இங்கு மழை!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு  பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது, அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தது . அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் முதலில் இருந்து தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. அதன் பிறகு வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் கடந்த வாரங்களில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகின்றது. இந்த வகையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நாளை முதல் வியாழன் கிழமை வரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். சென்னை அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச நிலை 23 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement