Connect with us

Breaking News

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு!

Published

on

information-published-by-the-department-of-education-those-who-did-not-take-part-in-the-public-examination-have-a-chance-to-write-the-exam-again

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 12 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்கள் சுமார் 50,000 பேர் மீண்டும் தேர்வு எழுத பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை மீண்டும் தேர்வு எழுத வைப்பது பற்றி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகின்றது. மேலும் மார்ச் 24 ஏப்ரல் பத்தாம் தேதிகளை பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்வில் பங்கு பெறாத மாணவர்களை சந்தித்து துணை தேர்வில் கலந்துகொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை மாநில திட்ட குழு இயக்குனர் அனுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement