இந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை

0
75

இந்திய ராணுவம் மீது சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 முதல் 200 சுற்றுகள் துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் இரு நாடுகள் இடையே எல்லை பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்திதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .இந்த சூழலில் ,இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன ராணுவம் , வடக்குக் கரையில் 100 முதல் 200 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.சீன வீரர்கள் தெரியாமல் ஒரு ராணுவ நிலையை நிறுவ இந்திய வீரர்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

இந்தியாவில் லடகா எல்லையில் ஃபிங்கர் 3-4 அருகில் உள்ள பகுதிகளை இந்தியா தன்வசம் கொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீனப் பிரதிநிதி வாங் யி ஆகியோர் செப்டம்பர் பத்தாம் தேதி மாஸ்கோவில் சந்தித்து லடாக்கில் உள்ள உண்மை கட்டுப்பாட்டு வரிசையை தனித்து ஒப்பிட்டுள்ளார். ஆனால் ,அதற்கு முன்பாகவே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தையில் இருந்த போதும் , 5 அம்ச திட்டத்திற்கு ஏற்றுக்கொண்டு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர் .அதில் தொடக்கமாக பேச்சுவார்த்தை தொடரும் ,விரைவாக படைகளை விலக்கிக் கொள்ளவும், சரியான தூரத்தை பராமரிக்கவும், பதங்களை தணிக்கவும், புதிய நம்பிக்கையை அளப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ,ஆகிய அம்சங்கள் இடம்பெற்றனர்.

ஆனால் ,கடந்த வாரம் நடந்த லடாக் உள்ள ஏரியின் தென்கரையில் இந்திய நிலைகளை அறிய முயன்றது ,அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லடாக் எல்லையில் உயரமான இடங்களை ஆக்கிரமித்து அதன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணிக்க முடிவாகவும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது .தற்பொழுது இந்தியா வசம் உள்ள உயரமான பகுதிகளுக்கு செல்ல சீன ராணுவம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன .பின்னர், இந்திய ராணுவம் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K