இந்தியாவில் 150ஐ கடந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு!

0
59

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் நோய் தொற்று தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதாக தெரிகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவர் உட்பட 2 பேருக்கு முதன்முதலில் இந்த புதிய வகை வைத்துவிட்டு கண்டறியப்பட்டது, அதனையடுத்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், புதுடெல்லி, ஆந்திரா, சண்டிகர், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்காளம், தமிழகம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150 என்ற அளவில் இருக்கிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், தலைநகர் புது டில்லியில் 22 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 20 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 14 பேருக்கும், குஜராத் மற்றும் கேரளா மாநிலத்தில் 11 பேருக்கும், ஆந்திரா மற்றும் சண்டிகர் மற்றும் தமிழ்நாடு அதோடு மேற்குவங்கத்தில் தல ஒருவருக்கு என்று ஒட்டுமொத்தமாக 153 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளான 54 பேரில் 22 பேர் மும்பையில் கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.