அமெரிக்க வேலையை உதறிவிட்டு கல்விக்காக வெப்சைட் தொடங்கிய இந்தியர்

0
68

குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது என்பது பெற்றோருக்கு ஒரு மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. நல்ல பள்ளி அமையவேண்டும், அப்படியே அமைந்தாலும் அந்த பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும், அந்த பள்ளியில் சேர்வதற்கு ரெகமெண்டேஷன் எல்லாம் செல்ல வேண்டும் என்பதே பெற்றோர்களின் கவலையாக உள்ளது. அது மட்டுமின்றி நல்ல பள்ளி எது என்பதை கண்டுபிடிப்பதில் பெற்றோர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன

குறிப்பாக கல்லூரியில் சேரும் போது அந்த கல்லூரி உண்மையில் தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிதானா? அரசின் அனுமதி பெற்ற கல்லூரி தானா என்பதில் பல குழப்பங்கள் பெற்றோர்களுக்கு உள்ளது. தரமில்லாத கல்லூரியில் சேர்ந்து படித்து பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு அருள்மீனா என்ற இளைஞர் தனது வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பி, மாணவ மாணவிகள் தரமான பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒரு பணியை செய்து வருகிறார். இவர் ’ஸ்கூல்மைகிட்ஸ்’ என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் இந்தியா முழுவதும் உள்ள தரமான மழலை பள்ளிகள் முதல் மருத்துவம் பொறியியல் கல்லூரிகள் வரை உள்ள விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த இணையதளத்தை மாதம் சுமார் 5 லட்சம் பேர் பார்வையிடுவதாகவும், இதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் கூறுகிறார் இந்த இணையதளத்தில் சென்று பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளின் தரம் மற்றும் சான்றிதழ் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

author avatar
CineDesk