வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி

0
52

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீல எல்லையா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து வேலை செய்தார். இந்த நிலையில் அவர் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே அமீரக அரசு கடந்த மே 18-ந் தேதி அளித்த பொதுமன்னிப்பில் விசா மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்தது. தற்போது வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி வரை பொதுமன்னிப்பை நீட்டித்துள்ளது.

இதனை அடுத்து சில சமூக பணியாளர்கள் முயற்சியால் அவர் நாட்டை விட்டு வெளியேற இந்திய துணைத்தூதரகத்தை அணுகினார். இந்திய துணைத்தூதர் டாக்டர் அமன்புரி மற்றும் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அவருக்கு பாஸ்போர்ட்டிற்கு பதிலாக அவசரகால சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அந்த நபருக்கு நாள் ஒன்றுக்கு 25 திர்ஹாம் வீதம் 16 ஆண்டுகளுக்கு ஒரு லட்சத்து 46 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) அபராதம் இருந்தது. பிறகு அமீரக அரசின் பொதுமன்னிப்பில் அவரது அபராதம் விலக்கி கொள்ளப்பட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதி பெறப்பட்டது.

author avatar
Parthipan K