டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், இஷான் கிஷன் உள்ளனர்.

உலகக் கோப்பை டி-20 இந்திய அணியில் அணியில் ஷிகர் தவான், சஹால், தமிழக வீரரான
நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அணியினருக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோ பர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

">
Exit mobile version