தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

0
61

பாகிஸ்தான் நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிப்பை சந்திக்க வைத்திருக்கிறது.ஆகவே இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் பொதுமக்கள் போராட்ட களத்திலிறங்கி போராடி வந்தார்கள்.மேலும் இம்ரான்கானின் கூட்டணி கட்சிகளே இம்ரான்கான் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதோடு பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரையில் பிரதமராக பொறுப்பேற்ற யாருமே 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ததில்லை என்பது தான் பாகிஸ்தான் வரலாறு அதனை இம்ரான்கான் முறியடிப்பார் என்று பலரும் கருதினார்கள், ஆனாலும் அவருக்கும் அந்த சாமர்த்தியமில்லை.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. அதோடு பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்தும் அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இந்த நிலையில், இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஸபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பயங்கரவாதமில்லாத அமைதியான நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. ஆகவே நம்முடைய வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நம்முடைய மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதி செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.