13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

0
70

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

அரையிறுதிக்கே தகுதி பெறாது என நினைக்கப்பட்ட பாகிஸ்தான் சுவற்றில் அடித்த பந்து போல பவுன்ஸ் ஆகி சரியான பார்முக்கு வந்து இப்போது இறுதி  போட்டிக்கு சென்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணியோடு இறுதிப் போட்டியில் மோதப்போவது இந்தியாவா இங்கிலாந்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர் பாகிஸ்தான் குறித்து பேசுகையில் “அவர்கள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களை எளிதாக மதிப்பிடக் கூடாது. கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள். இறுதிப் போட்டிக்கு செல்வது இந்தியாவாக இருந்தாலும் இங்கிலாந்தாக இருந்தாலும், அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு அணி வலிமையாக திரும்பி வந்ததை நான் பார்த்ததில்லை. அரையிறுதிக்கே செல்லாது என நினைத்த பாகிஸ்தான் இன்று இறுதிப் போட்டியில் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் ஹெய்டன் இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.