இலங்கை வாழ் இந்தியர்களை எச்சரித்த இந்திய தூதரகம்!

0
70

இலங்கையில் விலைவாசி உயர்வு உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை முடித்தவற்றைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இது பொதுமக்களை பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நிதி நெருக்கடியின் காரணமாக, உணவும் மற்றும் மருந்து அதோடு எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யவோ அல்லது வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையில் இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அந்த நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியிருக்கிறது. கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உரம் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு கப்பல் மூலமாக அனுப்பி இருக்கிறது இந்தியா.

இருந்தாலும் கூட இலங்கைக்கு நெருக்கடியான சூழ்நிலை இருந்து வருகிறது இலங்கையில் உண்டாகி இருக்கின்ற பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியான சூழ்நிலையால் பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழம்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்னால் அவர் ராணுவ விமானத்தில் தப்பிச் சென்றார். இதன் பிறகு மாலத்தீவில் இருந்தபடியே சிங்சபூருக்கு சென்றடைந்தார் என சொல்லப்படுகிறது.

இலங்கையில் பலவார போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் அவரையும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து இலங்கை முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரனில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் காலை வெளியிட்டார். இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தனர்.

அந்த வகையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது இந்த சூழ்நிலையில் இலங்கையில் கொழும்பு நகரில் இருக்கின்ற இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையில்,

இங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் தொடர்பான விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்துகொண்டு அதன்பிறகு தங்களுடைய பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது. தேவைப்படுமானால் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.