மும்பை மக்களுக்கு உதவிய ஹீரோ! புயல் பாதித்த பகுதியில் சமூக சேவை.! மக்களின் பாராட்டு மழையில் பிரித்வி ஷா.!!

0
126

மும்பை: கொரோனா பாதிப்பு இந்திய அளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் ஏற்பட்ட நிகர்சா புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிய மும்பை கிராம மக்களின் வாழ்க்கை புயல் வீசியதால் மேலும் கொடுமையான சூழலை சந்தித்தனர். நிகர்சா புயலினால் பல வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு நடிகர், நடிகை மற்றும் பிரபலங்களிடம் அம்மாநில அரசு வேண்டுகோள் வைத்தது.

இந்நிலையில் மும்பையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், மும்பை கிரிக்கெட் பிரபலங்கள் ரோகித், விராட் கோலி மற்றும் பல்வேறு பிரபலங்கள் யாரும் உதவ முன்வராத நிலையில், இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். பணமாக உதவாமல் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் ஊருக்கே சென்று உதவி புரிகிறார். மும்பையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் மண்டவா பகுதியில் உள்ள டோகவாதே என்ற கிராமத்திற்கு சென்ற பிரித்வி ஷா, அங்குள்ள ஊர் தலைவரின் வீட்டில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேடியான உதவிகளை செய்து வருகிறார்.

வீட்டின் மேல் கூரைகள் சீரமைப்பது, பசியால் தவிக்கும் பகுதியில் உணவு வழங்குவது மற்றும் கொரோனா பரவாமல் தடுக்க பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சமூக விலகல் விழிப்புணர்வு போன்ற வேலைகளை செய்து வருகிறார். இச்சம்பவம் அந்த ஊர் தலைவரின் மகன் உதவியோடு பிரித்விஷா செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி பொது மக்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது. சீனியர் வீரர்கள் கூட கண்டுகொள்ளாத நிலையில், இளம் வயதில் மக்களுக்கு சேவை செய்யும் பிரித்வி ஷா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

author avatar
Jayachandiran