இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!

0
46

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!

 

இந்திய கிரிக்கெட் அணியின்தேர்வுக் குழுவின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்கள் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக ஆல்ரவுண்டராக செயல்பட்ட அஜித் அக்ரகார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அஜித் அக்ரகார் அவர்களை புதிய தேர்வுக் குழுத் தலைவராக நியமித்துள்ளது.

 

இதற்கு முன்பு தேர்வு குழுத்தலைவராக இருந்த சேத்தன் சர்மா அவர்கள் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக அந்த இடம் காலியாக இருந்தது. இதையடுத்து தற்காலிக தேர்வுக்குழு தலைவராக சிவசுந்தர்தாஸ் செயல்பட்டு வருகிறார். இதையடுத்து காலியாக உள்ள தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி தேதி ஜூன் 30 என்றும் அறிவித்தது.

 

இதையடுத்து அஜித் அக்ரகார் அவர்களும் விண்ணபிக்கும் கால அவகாசம் முடிவதற்குள் தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ மூன்று உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு அஜித் அக்ரகாரை தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து அஜித் அக்ரகார் அவர்கள் இந்திய ஆண்கள் தேர்வுக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

46 வயதான ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 191 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் நான்கு  டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2007ம் ஆண்டு இந்தியா வென்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடியுள்ளார்.

 

மேலும் அஜித் அக்ரகார் அவர்கள் மும்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செய்லப்ட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக அஜித் அக்ரகார் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.