“நான் கங்குலியை வெறுக்கிறேன்” முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்..!!

0
88

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கங்குலி காலத்தில்தான் இந்திய அணி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது என்று கூறலாம். அதில் கங்கலிக்கு பெரும் பங்கு உண்டு. அணியில் இளம் ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு தருவது, போட்டியின் போது எதிரணியிடம் கோபத்துடன் வாதிடுவது, திட்டமிட்டபடி வெற்றி வாகை சூடிய பின்னர் எதிரணியை சேட்டை செய்வதில் கங்குலி கைதேர்ந்தவர்.

அதேநேரத்தில் கங்குலி மீதான விமர்சங்கள் முன்வைத்த சம்பவங்களும் உண்டு. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் புகாரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நசீர் ஹூசைன் கருத்து கூறியுள்ளார். இது தொடர்பான கிரிக்கெட் இன்சைடு அன்ட் அவுட்சைடு நிகழ்வில் அவர் கூறியதாவது;

கங்குலிக்கு எதிராக விளையாடும் போட்டியின் டாஸ் விடுவதற்கு முன்பு என்னை நீண்ட நேரம் காக்க வைத்திருக்கிறார். இப்போது அவருடன் கிரிக்கெட் கமண்ட்ரியாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர் இப்போதும் நேரம் தவறிதான் வருகிறார். மேலும் சச்சின் குறித்து பேசுகையில், சச்சினை அவுட் ஆக்குவதற்கு எத்தனையோ முறை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் அவர் நுட்பமான திறமை கொண்டவர்’ இவ்வாறு நசீர் தனது கருத்தை கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran