மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

0
59

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று  வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சைனி இறக்கப்பட்டனர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

சஞ்சு சாம்சனுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். இந்திய அணி பேட்டிங்கில் ஆரம்பத்தில் இருந்து சொதப்ப ஆரம்பித்தது சாம்சன், கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த நிலையில் களமிறங்கிய மனிஷ் பாண்டே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் முன்றோ மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் எளிதாக அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைக்க, கடைசி கட்டத்தில் இந்திய அணி பவுலிங்கில் மாயாஜாலம் செய்தது. கடைசி ஓவருக்க் முந்தைய ஓவர் நன்றாக விளையாடிய நியுசிலாந்து கடைசி ஓவரைல் சொதப்ப ஆரம்பித்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் டெய்லர் மற்றும் செய்ஃபெர்ட் ஆகியோர் இருந்தது வெற்றி விரல் நுனியில் இருந்தது.

ஆட்டத்தை மாற்றிய கடைசி ஓவரை தாக்கூர் வீசினார். இதில் முதல் பந்தில் விக்கெட்டும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் செல்ல போட்டி பரபரப்பானது.  அதற்கடுத்த பந்துகளில் ராஸ் டெய்லர் மற்றும் மிட்செல் ஆகியோரை அவுட் ஆக்கினார் தாக்கூர். கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாக சாண்ட்னர் பந்தை அடித்து விட்டு இரு ரன்கள் ஓட முயல இரண்டாவது ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டை ஆக இன்றைய போட்டியிலும் சூப்பர் ஓவர் வீச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. போன போட்டியை போலவே இந்த போட்டியிலும் கடைசி நேர சொதப்பலால் நியுசிலாந்து அணி வெற்றி வாய்ப்பை மயிரிழையில் விட்டுள்ளது.

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து பூம்ரா ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 பந்துகளில் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

author avatar
Parthipan K