கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!

0
105

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் இப்போது இரண்டாவது போட்டியையும் வென்றுள்ளது.

கேண்டர்பரி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷெபாலி வெர்மா 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடி அவுட் ஆகினர்.

அதன் பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதமடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 333 ஆக உயர்ந்தது.

அதன் பின்னர் கடினமானை இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்த போட்டியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.