ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

0
99

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது.

நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் தொடக்க வீரராக சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.

சமீபத்தில் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஷிக்கர் தவான், சுப்மன், கில் ஜோடி நல்ல துவக்கத்தை கொடுத்தது. ஆனாலும் தற்போது லோகேஷ் ராகுல் வருகை தந்திருப்பதால் 3து இடத்தில் களமிறங்கவுள்ள சுப்மன்கில் இந்த ஆட்டத்திலும், ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட் கீப்பர் பேட்டிங் கான இடத்திற்கு இஷான் கிஷன், சஞ்சீவ் சாம்சங், உள்ளிட்டோரிடையே போட்டி நிலவுகிறது. பேட்டிங்கில் தீபக் ஹூடா, ருதுராஜ் கேய்வாட், ராகுல் திரிபாதி, போன்றோர் கை கொடுத்தால், நல்ல ரன் குவிப்பை சேர்க்கலாம்.

வேகப்பந்துவீச்சை பொறுத்த வரையில் ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார்,உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சை பொறுத்த வரையில் குலதீப் யாதவ், அக்ஸர் பட்டேல் கூட்டணி விக்கெட்டை எளிதாக வீழ்த்தலாம்.

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் ஜிம்பாப்வே அணி இருக்கிறது. இதில் 2 போட்டிகளில் வங்கதேச ஆணி நிர்ணயித்த இமாலய இலக்கை சேஸ் செய்திருப்பது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலான விஷயம்தான்.

இந்த தொடரில் 2 சதம் உட்பட 252 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராஜா மறுபடியும் கை கொடுக்கலாம். பேட்டிங்கில் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா, இன்னொசண்ட் காயா உள்ளிட்டோர் கை கொடுத்தால் நன்றாக இருக்கும்.