இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி!

0
84

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நேற்று இரவு நடந்தது, இந்திய நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங் அறிமுகமானார். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்னிலும், இசான் கிஷன் 8 ரன்னிலும், ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தீபக் 33 ரண்களும் சூரியகுமார் யாதவ் 39 ரன்களும். சேர்த்தனர். ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளை சந்தித்து 51 ரன்களை சேர்த்தார். அக்சர் பட்டேல் 17 ரன்னுடன் ஆட்டமிழந்தார். இந்த சூழ்நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்காந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 4 ரன்னிலும், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை வழங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வெளியேற செய்ததால் இந்திய பந்துவீச்சாளர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

அதன் பிறகு களமிறங்கிய டேவிட் மாலன் 21 ரன்கள், ஹேரி ப்ரூக் 28 ரன்கள் மொயின் அலி 36 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதோடு மற்ற வீரர்கள் சொற்பரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

கடைசி சமயத்தில் கிரீஸ் ஜோர்டான் 26 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சூழ்நிலையில், 19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சார்பாக ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப்சிங் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். புவனேஸ்வர் குமார் ஹர்சல் பட்டேல் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என முன்னிலை பெற்று இருக்கிறது 2வது போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.