இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி! வீரர்களை பாராட்டிய கோலி!

0
72

நான்கு தினங்களில் முடிவிலும் இரண்டு அணிகளுமே சமபலத்துடன் மோதி இருப்பதால் விறுவிறுப்பான போட்டியாக இருந்தது ஆனாலும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து வசதிகளும் பறிபோனது. இந்திய அணியின் சார்பாக மிகவும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், சாமி 3 விக்கெட்டுகளையும், எடுத்தார். இதனைத்தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் மிகவும் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்களை சேர்த்தார் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தார்.

இதன் காரணமாக, முதல் இன்னிங்சில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்றது அதன் பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களான ராரி பேர்ன்ஸ் 18 ரன்களும், சிப்ளே 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார்கள். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்,, பேர்ஸ்டோ ஜோடி மிகவும் சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார் பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தார். கடைசியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி முன்னரே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததன் காரணமாக, 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதே சூழ்நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இருந்தது ஆனாலும் மழை பாதிப்பை உண்டாக்கியதன் காரணமாக, இறுதிவரையில் போட்டி ஆரம்பிக்க முடியாமல் ஆட்டம் டிரா ஆகிப்போனது.

இதுதொடர்பாக உரையாற்றி இருக்கின்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு டெயில் என்டர்ஸின் பேட்டிங் மிகவும் முக்கியமானதாக இருந்து இருக்கும் என்று பாராட்டியிருக்கிறார். எங்களுடைய குறிக்கோள் வெற்றி பெற்றது எங்களுடைய பந்துவீச்சாளர்கள் 36 கடின உழைப்பிற்கு பிறகு பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் முதலில் 40 ரன்கள் முன்னிலை பெற முயற்சி செய்தோம் கடைசியில் அது 95 ரன்கள் ஆக மாறிப்போனது அந்தரங்கள் மிகவும் முக்கியமான ஒன்று என தெரிவித்திருக்கிறார். அந்த ரன் இந்த போட்டியில் முக்கியமான பகுதியாக பார்க்கப்பட்டிருக்கிறது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது எங்களுடைய பலம் என்று தெரிவித்திருக்கிறார்.

முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா அவுட் ஆன பிறகு இந்தியா மிக விரைவில் ஆட்டம் இழந்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக கடைசி வீக்கத்திற்கு சுராஜ் பும்ரா கூட்டணி 33 ரன்களை சேர்த்தது. 28 ரன்களுடனும் சேர்த்தார்கள் இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் காரணமாக, இந்திய அணிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான ரன்கள் கிடைத்தது. கடைசியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் சேர்த்தது இதன் மூலமாக இந்திய அணிக்கு 95 ரன்கள் முன்னிலை கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக உரையாற்றிய கோலி நாட்டிங்காம் ஆடுகளம் மற்றும் வேகம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்திருக்கிறார். இந்த ஆட்டம் தான் எங்களுடைய சிறந்ததாக இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்டால் அது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும் என்றும், அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.