இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!

0
76

அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியா பல லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல நாடுகளுக்கு அனுப்பி தனது உதவி கரங்களை நீட்டி வருவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்படுகிறது என்று இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா.

அதாவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய துறைகளின் அமைச்சரகம், ‘இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்பட்டு வருவதாக’ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனெனில், இந்தியா, பல லட்சம் கொரோனா தடுப்பு மருந்து போஸ்களை வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் பல லட்சம் டோஸ்களை வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்கு கொடுத்து உதவி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா இந்தியா மீது புகழாரம் சூட்டியுள்ளது.

author avatar
Parthipan K