இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே! இலங்கை மக்களுக்கு உதவிகள் தொடரும் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
65

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அதோடு அரசியல் நெருக்கடியும் இணைந்து கொண்டதால் அங்கே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதோடு இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள். அன்றாட பொருட்கள் மிகப்பெரிய விலை உயர்வை சந்தித்து இருந்தனர் இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

அத்துடன் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள் பொதுமக்கள் அனைவரும்.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

அதோடு பல நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களால் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

அத்துடன் பொதுமக்களின் இந்த தீவிர ஆர்ப்பாட்டம் காரணமாக, இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்சே திடீரென்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பொதுமக்கள் அனைவரும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

இருந்தாலும், அவர் உடனடியாக தன்னுடைய வீட்டில் இருந்து தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்று பல வதந்திகள் கிளம்பின.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் அவருடைய வீட்டிற்கு இரவோடு இரவாக தீ வைத்து எரித்தனர்.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவி ஏற்றார்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது, இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூதரகத்தின் வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது.

ரனில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதனடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.