சீனாவுடன் ஏற்பட்ட இராணுவ மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலி! எல்லையில் பதற்றம்

இந்தியா – சீனா நாடுகளின் எல்லை பகுதியான லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

எல்லை பகுதியான லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவ படைகளையும் திரும்ப பெறும் கடைசி நேரத்தில் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக இந்திய ராணுவ தரப்பில் கூறியதாவது; இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டையின் போது துப்பாக்கிச் சூடு ஏதும் நடைபெறவில்லை. கல்லெறிதல் மற்றும் கைகலப்பு சண்டை என விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர். இந்தியா – சீனா நாடுகளுக்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Copy

Comments are closed.

WhatsApp chat