இந்திய அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு 98 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

0
72

இந்தியாவில் நோய்த்தொற்றுப்பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஊடுருவியது இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல. தன்னுடைய வீரியத்தை அதிகரித்து 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் தன்னுடைய உச்சகட்டத்தை எட்டியது.

இதனால் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியது.

அதன் பிறகு இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஊழல் அங்கு தற்போது வரையில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தற்சமயம் இந்தியாவில் நோய்த்தொற்றின் 3வது அலை தன்னுடைய முடிவை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2503 ஆக இருந்தது அதேசமயம் நேற்றைய தினம் இதில் பெரிய அளவில் மாற்றம் எதுவுமின்றி 2,568 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 2,876 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 4,29,98,9398 என அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஒரே நாளில் 98 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலமாக பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,16,072 என்று அதிகரித்திருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 3,884 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,50,055 என்று அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய்தொற்றுக்கு தற்சமயம் 32,811 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நாட்டில் இதுவரையில் 1,80,60,93,107 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் நாட்டில் நடைபெற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 7,52,818 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 78,05,06,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.