இந்தியாவில் நோய்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் பலி! சுகாதாரத்துறை அமைச்சகம்!

0
62

நாட்டில் சமீப காலமாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் மறுபடியும் நோய்த்தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் மக்கள் கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் முககவசம் அணியவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்று எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேர நோய் தொற்று பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதன் விபரம் வருமாறு, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பாதிப்பிற்கு ஒரே நாளில் 33 பேர் பலியாகியிருக்கிறார்கள். நோய் தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15079 என அதிகரித்திருக்கிறது.

நோய் தொற்றிலிருந்து ஒரேநாளில் 1656 பேர் குணமடைந்திருக்கிறார்கள் குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,16,068லிருந்து 4,25,17,724 எனஅதிகரித்திருக்கிறது.

நாட்டில் இதுவரையில் 187.46 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவீதமாக இருக்கிறது.