ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?

0
93

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் குரூப் ஏ வில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசியக்கோப்பைக்கான முழு அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோத அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் முதல் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், அடுத்த சுற்றில் இரண்டு முறைகள் மோதவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை மோத வாய்ப்புள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் டி 20 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன.