நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

0
102

நாட்டில் கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த சூழ்நிலையில், நேற்று 12516 ஆக குறைந்தது இதில் கேரள மாநிலத்தின் பங்களிப்பு மட்டுமே 7224 என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 16 ஆயிரத்து 250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகிவிட்டது. இதன் மூலமாக ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 36 ஆக அதிகரித்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல நோய் தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 552 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 545 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் நேற்று முன்தினம் இந்த நோய் தொற்றால் 340 பேர் பலியாகியிருக்கிறார்கள். நேற்று இந்த எண்ணிக்கை அதிரடியாக 500க்கும் மேல் உயர்ந்து இருக்கிறது. இதன் காரணம் வழக்கம்போல கேரள மாநிலம் தான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அங்கே விடுபட்டுப்போன நோய்த்தொற்று பாதிப்பை கணக்கில் சேர்த்து நேற்றைய பலி எண்ணிக்கை 450 ஆக இருக்கிறது இதன் மூலமாக உயிரிழப்பு விகிதம் 1.35 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 12403 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள், இதனால் குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 483 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலமாக குணமடைந்தவரின் எண்ணிக்கை 98.26 ஆக இருக்கிறது.

அதோடு நாடு முழுவதும் கடந்த 274 தினங்களில் நோய் தொற்றுக்கு தற்போது ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 111 கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என சொல்லப்பட்டு இருக்கிறது.