ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதானாம்!

0
107

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருக்கும் பொருளாதார வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பாதுகாக்க விரும்புவதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது அப்பாஸ் தெரிவித்து இருக்கின்றார்.

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், ட்ரோன் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கடும் பயத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் தாலிபான் தலைவர்கள் பக்கத்தில் நாடுகளுடனான அரசியல் பொருளாதார உறவுகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இந்தியாவுடனான உறவு தொடர்பாக ஷேர் முகமது அப்பாஸ் தெரிவிக்கும்போது, தெற்காசியாவில் இந்தியா மிக முக்கியமான நாடாக இருக்கிறது அந்த நாட்டுடன் ஆப்கானிஸ்தானுக்கு இருக்கின்ற அரசியல் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தாலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நாங்கள் விருப்பம் கொண்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மறுபடியும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் மூலமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வது. மிகவும் முக்கியம் என்று அவர் கூறியிருக்கின்றார். ஆப்கானிஸ்தானில் சுமார் 500 திட்டங்களை செயல்படுத்துவதற்கு மூன்று மில்லியன் டாலர்களை அதாவது 22 ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்து இருக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.