தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

0
62

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.இதில் இதுவரையில், நாட்டில் 200 கோடி தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதி இருக்கிறார்.

நாட்டில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் திருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், 12 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் ஜூலை மாதம் 17ஆம் தேதி 200 கோடி டோஸ் என்னும் மைல்க்கல்லை கடந்தது இந்தியா.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டுவியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் 200 கோடி டோஸ் தடுப்பூசி சாதனையை படைத்ததற்காக தடுப்பூசி செலுத்திய எல்லோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பாராட்டு கடிதத்தை எழுதி வாழ்த்தியிருக்கிறார்.

இதனை தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவின் தளத்தில் உள்ளீடு செய்து பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.