இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

0
83

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் ஆட்டங்களில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பரவல் அதிகமாகி வரும் காரணத்தால், புனேவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடத்துவதற்கு ஏற்பாடு ஆகி வருகின்றது. மார்ச் மாதம் 23, 26 மற்றும் 28 ஆகிய தினங்களில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இருந்தாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகமாகி வருவதால், புனேவில் நடத்தப்பட இருக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கினால் வைரஸ் தொற்று இன்னும் அதிகமாகலாம் என்ற பயம் எழுந்தது. இதன் காரணமாக, ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டியை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனையில் போட்டி நடத்துவதற்கான இடத்தை மும்பைக்கு மாற்றம் செய்யலாம் என்று ஆலோசனையும் செய்யப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், புனேவில் 3 ஒருநாள் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர், ஆகியோரின் சந்திப்பிற்கு பின்னர் போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றின் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் தற்போதைய தீவிரத்தை கவனத்தில் வைத்து முதலமைச்சரின் இந்த அறிவுறுத்தலுக்கு பின்னர் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதன்காரணமாக, புனேவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.